/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைதுகண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
கண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
கண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
கண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
ADDED : மே 29, 2010 12:59 AM
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கவுன்சிலர் ஒருவரை தென்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்ததால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு திருச்செந்தூர் வழியாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ்சில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன்(48) என்பவர் கண்டக்டராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இந்த பஸ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள திருச்செந்தூர் ரோட்டில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதனை அறிந்த தூத்துக்குடி மாநகர கவுன்சிலர் செல்வம் என்றசெல்வராஜ் பஸ்ஸை வழிமறித்து கண்டக்டர் நாராயணனை கண்டித்துள்ளார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவர் நாராயணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாராயணன் தூத்துக்குடி தென்பாகம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.